ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

டெல்டா பகுதியை பாலைவன மாக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரத்தை கெடுத்துவிடும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ”மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வருகின்ற 01.08.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஒகேனக்கல், கண்ணாடி மாளிகை அருகில் தமிழ்நாடு டெல்டா பகுதியை பாலைவன மாக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரத்தை கெடுத்துவிடும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

அதுசமயம் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கழக கொடியுடன் திரளாக கலந்துக்கொண்டு கண்டன ஆர்பாட்டத்தை வெற்றிபெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தர்மபுரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் பி.பழனி யப்பன் தனது செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *