மன்னார்குடி., ஜூலை.30

நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் தொடர் போராட்டதில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த வகையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதிணி தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் , நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என முழக்கம் எழுப்பினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *