கோயம்புத்தூர், 30 ஜூலை 2026:
எல்.எம்.டபிள்யூ லிமிடெட் நடத்தும் டிஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. போட்டியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திறமையானவர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
டிஜே நினைவு புகைப்பட போட்டி, எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி ஜெயவர்த்தனவேலு அவர்களின் நினைவாக நிறுவப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.
புகைப்பட கலை மேல் டி ஜெயவர்த்தனவேலு அவர்களுக்கு இருந்து பெரும் ஈடுபாடு மற்றும் அன்பின் நினைவாக இந்த போட்டி நடத்தப்படுகிறது 2012-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இப்போட்டி புகைப்படக் கலைஞர்களிடமிருந்து தொடர்ந்து மிகுந்த வரவேற்பையும் ஆர்வமிக்க பங்கேற்பையும் பெற்று வருகிறது. டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டியின் பதினைந்தாவது பதிப்பிற்கு கிடைத்துள்ள வரவேற்பானது, புகைப்படத் துறை சார்ந்த நிகழ்வுகளில் இது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருவதை உறுதிப்படுத்துகிறது.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பியவர்கள் 2026 மே 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் www.djmpc.in என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களை மதிப்பீடு செய்ய, இந்தியாவின் ராகுல் சச்தேவ் மற்றும் கல்யாண் வர்மா, கென்யாவின் அந்தோனி ஓச்சியெங் ஒன்யாங்கோ உள்ளிட்ட புகழ்பெற்ற புகைப்படக் கலை நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டது. திரு. கே. மருதாச்சலம் போட்டி ஆலோசகராகவும், திரு. விக்ரம் சத்யநாதன் போட்டி நிர்வாகியாகவும் செயல்பட்டனர்.
டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டியில் மொத்தம் ரூ .12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2026-ஆம் ஆண்டிற்கான இப்போட்டியில், வனவிலங்கு உருவப்படங்கள் (Wild Portraits), இயற்கைக் காட்சிகள் (Nature Scapes) மற்றும் வான்வழிப் பார்வை (Aerial View) ஆகிய பிரிவுகளில் 37 நாடுகளைச் சேர்ந்த 2,334 நபர்களிடமிருந்து சுமார் 12,278 புகைப்படங்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு பரிசுகள் தவிர, சிறப்பான பங்களிப்பை வழங்கிய பத்து பங்கேற்பாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 2026 நிகழ்வானது, 2026 ஜூலை 30, வியாழக்கிழமையன்று கோயம்புத்தூரில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட பொதுக் கண்காட்சி, 2026 ஆகஸ்ட் 5, புதன்கிழமை வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.
எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கி கௌரவித்தார். சிறந்த புகைப்படங்கள் கண்காட்சி 2026 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை பொதுமக்களுக்காக நடைபெறும்.
வெற்றியாளர்கள்:
இயற்கைக் காட்சி (Naturescape):
• இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட, திரு. தினேஷ் இன்சைட் (Dinesh Insight) அவர்களின் ‘Clay Apartments’ (களிமண் குடியிருப்புகள்) என்ற புகைப்படம் முதல் பரிசை வென்றது.
• பிரேசிலின் இகுவாசு (Iguazu) பகுதியில் எடுக்கப்பட்ட, பிரான்ஸ் நாட்டின் அர்னாட் ஃபாரே (Arnaud Farre) அவர்களின் ‘Between Black and White’ (கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே) என்ற புகைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
வனவிலங்கு உருவப்படங்கள் (Wild Portraits):
• இந்தியாவின் கர்நாடக மாநிலம் தார்வாடில் எடுக்கப்பட்ட, திரு. அனிருத் காமகெரி (Anirudh Kamakeri) அவர்களின் ‘Early morning prayer’ (அதிகாலை பிரார்த்தனை) என்ற புகைப்படம் முதல் பரிசை வென்றது.
• இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் எடுக்கப்பட்ட, மற்றொரு இந்திய புகைப்படக் கலைஞரான திரு. ஓங்கார் ரவீந்திர பெட்ரே (Onkar Ravindra Bedre) அவர்களின் ‘Last of Us’ (எங்களின் கடைசி) என்ற புகைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
வான்வழிப் பார்வை (Aerial View):
• இந்தியாவின் அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் எடுக்கப்பட்ட, திரு. சச்சின் பரலி (Sachin Bharali) அவர்களின் ‘The Sleeping Family’ (தூங்கும் குடும்பம்) என்ற புகைப்படம் முதல் பரிசை வென்றது.
• போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ (Okavango) பகுதியில் எடுக்கப்பட்ட, திரு. ராமச்சந்திரன் கோவிந்தராஜ் (Ramachandiran Govindaraj) அவர்களின் ‘The last waterhole’ (கடைசி நீர்நிலை) என்ற புகைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.