தமிழக முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் பேசிய பேச்சைக் கண்டித்து மாநில முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அதன்படி தேனி மாவட்டம் தேனி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் இராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து பேசினார்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஒ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசும்போது தமிழக முதலமைச்சராக மீண்டும் முக ஸ்டாலின் வரும் வரை திமுகவின் போராட்டங்கள் தொடரும் என்றார் ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முதல்வர் விஜயை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன
இதில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் திமுக உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் எல். மூக்கையா முன்னாள் போடிசட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவகுமார் போடி ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மாள் ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை தேனி நகர செயலாளர்கள் நாரயண பாண்டியன் சுர்யா பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் பழனிசெட்டிபட்டி வி பி ஏ. மிதுன் சக்கரவர்த்தி பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் வீரபாண்டி கீதா சசி மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி ஓடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் அனுமந்தன்பட்டி ராஜேந்திரன் கோம்பை முல்லை சேகர் பண்ணைப்புரம் லட்சுமி இளங்கோ உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.