திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார்.
நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம் (World Scout Scarf Day) உலகெங்கிலும் உள்ள சாரணர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி, ராபர்ட் பேடன்-பவல் (Robert Baden-Powell) இங்கிலாந்தின் பிரவுன்ஸீ தீவில் (Brownsea Island) முதல் சாரணர் முகாமைத் தொடங்கினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையிலும், சாரணர் இயக்கத்தின் உலகளாவிய சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஸ்கார்ஃப்-ன் முக்கியத்துவம்: சாரணர்கள் தங்கள் கழுத்தில் அணியும் இந்த ஸ்கார்ஃப் (Scarf) அல்லது கழுத்துக்குட்டை, ஒற்றுமை, சேவை, தலைமைப் பண்பு, நட்பு மற்றும் சாரணர் உறுதிமொழிக்கு (Scout Promise) அளிக்கும் வாழ்நாள் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் குறியீடாக விளங்குகிறது.கொண்டாடும் முறைசாரணர்கள் மற்றும் சாரணியர்கள் (Scouts and Guides) தாங்கள் தற்போது அணியும் ஸ்கார்ஃபை அல்லது சாரணர் இயக்கத்தில் இணைந்ததன் நினைவாகத் தங்கள் பழைய ஸ்கார்ஃபை அன்றைய தினம் பெருமையுடன் அணிவார்கள்.இந்த நாளில் சாரணியத்தின் இலட்சியங்கள், நோக்கங்கள் மற்றும் சமூக சேவை மனப்பான்மை ஆகியவை நினைவு கூறப்படுகின்றன.
2007 ஆம் ஆண்டு உலக சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஐரோப்பிய அஞ்சல் நிர்வாகங்களின் கூட்டமைப்பான PostEurop அறிவித்த EUROPA கருப்பொருளின் கீழ் பல ஐரோப்பிய நாடுகள் சிறப்பு நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டன.
வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல் தலைகளில் சாரணர் ஸ்கார்ஃப் இடம் பெற்றுள்ளது. “Europa 100 anos do Escutismo” (ஐரோப்பா – ஸ்கவுட் இயக்கத்தின் 100 ஆண்டுகள்).ராபர்ட் பேடன்-பவொல் (Robert Baden-Powell) என்பவரால் 1907 இல் தொடங்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் (Scouting Movement) நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சாரணர் ஸ்கார்ஃப் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இந்த அஞ்சல் தலையில் சாரணர்கள் (Scouts) கழுத்தில் அணியும் பாரம்பரிய சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கழுத்துக்குட்டை (Scout Neckerchief / Scarf) சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட ஆண்டு 2007.வெளியிட்ட நாடு: போர்ச்சுகல் (அசோரஸ் பிராந்தியம் – Portugal Açores).அஞ்சல் கட்டணம் (Value) ஒவ்வொரு தனித்தனி அஞ்சல் தலையின் மதிப்பு €0.61 (யூரோ) ஆகும்.8 அஞ்சல் தலைகள் கொண்ட இந்த மினியேச்சர் தாளின் மொத்த மதிப்பு €4.88 ஆகும் (8 × 0.61 = 4.88).தாளின் கீழ் வலது மூலையில் போர்ச்சுகல் நாட்டின் அதிகாரப்பூர்வ அஞ்சல் துறையான நிறுவனத்தின் குதிரை வீரன் லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தாள்களை எளிதாகக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான பார்கோடு கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ளது என்றார்.