புதுச்சேரி, ஆக. 4: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *