தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெயராஜ் சாலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறார்களா என மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.6,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது, இருப்பு வைப்பது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதம் ஆகவே, விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *