அகில பாரத இந்து மகா சபா, தமிழ்நாடு சார்பில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா மாவட்டங்களின் நீர்வளம் மற்றும் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவில், காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதிகளில் புதிய அணைகள் மற்றும் தடுப்பணைகள் அமைத்து நன்னீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் வாட்டர் பாட்டில் நிறுவனங்களை அகற்றி, இனி புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது, நீடாமங்கலம் – வலங்கைமான் – கும்பகோணம் – ஆடுதுறை – திருப்பனந்தாள் – விருத்தாச்சலம் புதிய ரயில் வழித்தடத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் கமலாலய திருக்குளத்தை தூர்வாரி தூய்மையாக பராமரிக்கவும் மேலும் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்க்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோரி
தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் திரு. ராம நிரஞ்சன் அவர்கள், திருவாரூர் மாவட்டதுணை ஆட்சியளார் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் திரு. மாணிக்கம், மாவட்டத் தலைவர் திரு.(JPS)
ஜெ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.