அலங்காநல்லூர்.
ஆக.05-

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப்விஜய்,குறித்து அவதூறாக பேசியதாக கூறி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலினை கண்டித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தவெக சார்பாகசோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூ.வி.கருப்பையா தலைமையில் ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ்,முன்னிலையில் கையில் பதகைகளை ஏந்தி சமூக நீதி சமத்துவம் பேணி காப்பாற்றுவதாகவும் கொள்கையுடன் இருப்பதாக கூறிக் கொள்ளும் திமுக பெண்களுக்கு எதிராக பேசுவது அநாகரிகமான செயல் பெண்களை இழிவுபடுத்தி பேசும் உதயநிதிஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும் தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இதுபோன்று எந்நாளும் பெண்கள் குறித்து தவறாக பேசமாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும் என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் தியாகு, மகளிரணி நிர்வாகி லெட்சுமி,பேரூர் செயலாளர்
தளபதிரஞ்சித், முன்னாள் கூட்டுறவு தலைவர் பாலாஜி,நிர்வாகிகள் ராகவன், பரத், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், கார்த்திக், இணைச் செயலாளர் ராமநாதன்,மற்றும்
பிரேம்குமார்,அலங்காநல்லூர் டைல்ஸ் ரவி,வெள்ளைகெங்கை,விக்னேஷ்,சரத்குமார்,வலையபட்டி கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பாறைப்பட்டிகிளைச் செயலாளர் ராஜேந்திரன் வலசை தங்கராஜ், மற்றும் மகளிரணி நிர்வாகிகள்உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *