தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர்.வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் வணிகவியல் தினத்தை முன்னிட்டு கல்லூரி வணிகவியல் துறை சார்பில் எல்லைகளைத் தாண்டிய வணிகத்தில் புதுமைப்படுத்தல் வழிநடத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி சந்தை மாதிரி விளக்க கண்காட்சி நடைபெற்றது வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் வி. வாணி அனைவரையும் வரவேற்று பேசினார்

நிகழ்ச்சியில் உத்தம பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் என் முகமது சமீம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வணிகத்தில் ஏற்படும் மாற்றங்கள் புதுமைகள் எல்லைகளை கடந்து செயல்படும் வணிகம் குறித்து மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து வணிகச் சந்தை என்ற தலைப்பில் மாணவிகளின் மாதிரி விளக்க கண்காட்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்ற சிறந்த மாதிரி களுக்கு பரிசுகள் வழங்கி மாணவிகள் ஊக்குவிக்கப்பட்டனர் கல்லூரி மாணவிகள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யும் கல்லூரி சந்தை நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் 20 விற்பனையகங்கள் அமைத்திருந்தனர். இதில் காட்டன் சேலைகள் பேன்ஸி பொருட்கள் இனிப்பு வகைகள் சிற்றுண்டிகள் போன்ற 20 பொருள்களை விற்பனை செய்தனர்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் கூறும் போது இது போன்ற நிகழ்ச்சிகளால் எங்களின் விற்பனை நிறுவன மேம்படுத்தும் விதமாகவும் தொழில் முனைவோருக்கான சிறந்த பயிற்சியாகவும் எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்ததாக நெகழ்ச்சியுடன் கூறினார்கள் இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் வி வாணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *