கோவை போத்தனூரில் உள்ள மதீனா மஹாலில், கோவை எக்கனாமிக் சேம்பர் மற்றும் ஐ-ஸ்டெப் இணைந்து நடத்திய ‘ஐஏஎஸ் கனவு 2026’ யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 2-வது இடம் பெற்று சாதனை படைத்த ஆ. அப்துல்லா அஃப்ரீத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தனது அனுபவங்களையும் வெற்றிக்கான வழிமுறைகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், யுபிஎஸ்சி தேர்வுக்கான தயாரிப்பு, படிக்கும் முறை, சமகால நிகழ்வுகளை அணுகும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமூக நீதி கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், எக்கனாமிக்ஸ் சோசியல் விங் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஜி. முகமது ரஃபிக் கலந்து கொண்டு பேசுகையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை அறிவுசார் சமூகமாக உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற முயற்சிகள் மிகவும் அவசியமானவை என்றார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள ஐ-ஸ்டெப் நிறுவனர் பி.என்.ஏ. முகமது நாசர், ஆடிட்டர் ஆசிஃப் ஜாகிர், கோவை எக்கனாமிக் சேம்பர் ஒருங்கிணைப்பாளர் பிரஸ்டின் ஜெயலாபுதீன், பேராசிரியர் டாக்டர் ரகுமான், சபீர் அகமது, அமீன் மற்றும் அனைத்து விங் நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் தெரிவிப்பதாக கூறினார்…

மாணவர்கள், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கற்ற அடிப்படைப் பாடங்களை ஆழமாகப் படிக்க வேண்டும், அரசு தொடர்பான அன்றாட நிகழ்வுகள் மற்றும் நாளிதழ்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *