தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை தினமான இன்று ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள சுருளி அருவியில் நீராடி விட்டு தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்
அமாவாசையிலேயே சிறந்த அமாவாசை ஆடி அமாவாசை இந்த நாளில் தங்களை இந்த பூமியில் பிறக்க வைத்து வளர்த்து விட்டு சென்ற தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது மேலும் அமாவாசை நாளில் கடல் நதி அருவி உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு எள் மற்றும் நீர் அளித்து தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி தங்களது குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது ஜதீகமாகும் இதன்படி இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர் .
சுருளி அருவியில் புனித நீராடிய பின் முல்லைப் பெரியாற்று நதிக்கரையில் அமர்ந்து மூதாதையர்களை நினைத்து வழிபட்டு எள் மற்றும் தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்தனர் தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமான வேத விற்பன்னர்களும் அருவிக்கரையில் திரண்டிருந்தனர் தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சுருளி அருவிக்கு வந்திருந்ததால் சுருளி அருவி பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது இதுகுறித்து கம்பம் நகரைச் சேர்ந்த இல்லத்தரசி பி சூரியகலா கூறும்போது அமாவாசையிலேயே சிறந்த அமாவாசை ஆடி அமாவாசை இந்த நாட்களில் நமது முன்னோர்களை நினைத்துத் தர்ப்பணம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் மனநிம்மதி மகிழ்ச்சி நோயற்ற வாழ்வு மற்றும் குறைவற்ற செல்வம் கிடைக்கும் என நம்புவதால் தங்களது முன்னோர்களை நினைத்துத் தர்ப்பணம் செய்து வழிபட்டதாக அவர் கூறினார்
ஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு சுருளி அருவியில் சுருளிப்பட்டி ஊராட்சி சார்பில் வேன் கார் பஸ் இருசக்கர வாகனம் போன்றவைகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் ஆனால் இன்று ஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவில்லை இதேபோல் சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படும் இன்று ஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் இலவசமாக கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டனர் கம்பம் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் காந்தி சிலை அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கம்பம் கிளை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.