தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள அத்திவாக்கம் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் தலைமையில் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அத்திவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குமரேசன், அன்பு, அன்பழகன், பிரவீன், ரித்திக், மகேந்திரன், கதிரேசன், டேவிட், ராம், ரமேஷ், சக்திவேல், சூர்யா, மோகன், ஜோதி, கலை, கனகராஜ், சிவகுமார், கோகுல், பிரகாஷ், மா. சூர்யா, சரவணன், தினகரன், திருமலை பெருமாள் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *