சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஒடிசி – The Soul’s Blossoming’ என்ற கிட்டார் இசையை மையமாகக் கொண்ட இசை-காட்சி நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் நடைபெறுகிறது.
சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் இணைச் செயலாளர் காயத்ரி பிரகாஷ் மற்றும் பிரகாஷ் சிதம்பரம், கிட்டார் துறைத் தலைவர் பிரதீபன், குமரகுரு கல்வி நிறுவனங்கள் டாக்டர் பிரிய தர்ஷினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சி குறித்து பேசுகையில் ,
இந்நிகழ்ச்சியில் சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்கின்றனர். கிட்டார் இசையுடன் காட்சியமைப்பு மற்றும் கலை நிகழ்த்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘ஒடிசி’ என்பதற்கு நீண்ட, அர்த்தமுள்ள மற்றும் சவால்கள் நிறைந்த பயணம் என்று பொருள். அந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் வளர்ச்சி மற்றும் மலர்ச்சியை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஒருவர் கடந்து செல்லும் அனுபவங்கள், மாற்றங்கள் மற்றும் தன்னைத் தானே உணரும் நிலைகள் ஆகியவற்றை இசை மற்றும் காட்சிகள் மூலம் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து கோவை மக்களுக்காக நடத்தும் ஐந்தாவது பெரிய அளவிலான கலை நிகழ்ச்சி இது. இதற்கு முன்னதாக ஜாலம்,சோல் , அஸ்டிட்வா மற்றும் வியோம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸின் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி, ஒடிசி நிகழ்ச்சிக்கும் ‘Pay as You Wish’ முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எதுவும் இல்லை. பார்வையாளர்கள் தங்களால் இயன்ற தொகையை விருப்பத்திற்கேற்ப வழங்கலாம். நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகளை www.tfacbe.com/event-list என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக உணவு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புக்கு : காயத்ரி – 98430 13400 | பிரதீபன் – 98943 07434 | பூர்ணிமா – 98437 10067