எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் காவேரி சங்கமத்தில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவேரி ஆறு கடலில் கலக்கும் காவேரி சங்கமம் என்றழைக்கப்படும் சங்கமுக தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடி அமாவாசை முன்னிட்டு தர்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.ஆடி, புரட்டாசி,தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினங்களில் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்பணம் கொடுத்தால் முன்னோர்களின் அருளாசி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்கள் முன்னோர்களுக்கு பச்சரிசி,கீரை வகைகள், காய்கறிகள்,எள் உள்ளிட்ட பொருட்களை வைத்து பலிகர்ம பூஜைகளை செய்து தர்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர்.இதில் பல்வேறு மாவட்டங்கள் ,வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன பூம்புகார் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.