அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் அலுவலகத்தின் வளாகத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் அ நல்லப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் ஆசண்முகம் வரவேற்று பேசினார் துணைத்தலைவர் அரிமா எஸ் எம் சந்திரசேகர் விழாவிற்கு தலைமை தாங்கினார் அமைப்பில் சிறப்பாக பணியாற்றி மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறப்பிக்கப்பட்ட கருப்பையன் மற்றும் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஜெய்கணேஷ் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது
விழாவில் நியமன துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ் துணைபுரவலர் சகானா காமராஜ் நிர்வாக குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி சிவசங்கர் அம்சவல்லி அமுதா நமச்சிவாயம் சடையப்பன் முருகன் சக்கரவர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்