தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நமது இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது. கல்லூரி நிறுவன செய்லர் கம்பம் ஏன் இராமகிருஷ்ணன் கல்லூரி இணைச் செயலர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் நம் இந்திய திருநாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா உரையாற்றினார்
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி மற்றும் கல்லூரி மாணவிகள் மும்மத வழிபாட்டு செய்திகளை கூறினார்கள் இந்த விழாவில் கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தேசிய கொடியும் இனிப்புகள் வழங்கப்பட்டன