ஈரோடு
அந் நூர் மஸ்ஜித் & மதரசா ஈபிபீ நகர் சூளை பள்ளிவாசல் சார்பில் 80 ஆவது வருட இந்திய சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த சுதந்திர தின விழாவில் பள்ளியின் தலைவர் சாகுல் ஹமீது கொடியேற்றினார் மற்றும் பள்ளியின் செயலாளர் ரசூல் முகைதீன் பொருளாளர் சாதிக் பாட்சா துணைச் செயலாளர் காதர் மைதீன் துணைப் பொருளாளர் அக்பர் அலி துணைத் தலைவர்கள் இஸ்மாயில் மற்றும் அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டு வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முஃப்தி மௌலானா முஹம்மது இப்ராஹிம் தாவூதி ஹஜ்ரத் அவர்களின் சுதந்திர தின சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது அதில் சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு பற்றியும் இந்தியாவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ரொம்ப விரிவாக விளக்கினார் முதல் முதலில் இறைவன் ஆதம் அவர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பிய போது அவர் இறங்கிய இடம் இந்தியா என்பதை கூறினார் ஆதம் அவர்கள் வாழ்ந்ததும் இந்தியா இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய ஒரு தொப்புள் கொடி உறவு உள்ளது இந்தியா இஸ்லாமியர்களுக்கானது எனவே இந்திய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இஸ்லாமியர்கள் வாழ வேண்டும் எனவும் அவர் கூறினார் விழாவின் இறுதியில் கனிராதர்குளம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் இமாம் வசீியுல்லாஹ் அவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தார் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஈரோடு அந் நூர் மஸ்ஜித் & மதரசா பள்ளிவாசல் இமாம் ஹஜ்ரத் முகமது சல்மான் மற்றும் மோதினார் சிக்கந்தர் பாஷா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.