உடன்குடி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கிளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சகோ. தவ்லத்துல்லா தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சகோ. ஹர்ஸீக் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இரத்ததான முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.
இரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இம்முகாம் அமைந்திருந்தது.
முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் உடன்குடி கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.