போளூர்:-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம், களம்பூர் தேர்வுநிலை பேரூராட்சி, ஆஞ்சநேயர் கோயில் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வீடியோ வாகனம் வாயிலாக களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி பயணம் திட்டம் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வுகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிகளை களம்பூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மலர் மாறன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.