அரியலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக திருச்சி பெல் பி எம் எஸ் செயல் தலைவர் ஜெயராமன் மாவட்ட பொதுச்செயலாளர் அரிமாராஜா மாவட்ட பொருளாளர் மணிகண்டன் செட்டிநாடு சிமெண்ட் ஆலை பி எம் எஸ் செயலாளர் அறிவழகன் தலைவர் அய்யப்பன் அமைப்பு செயலாளர் ராஜலிங்கம் மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை சிவகுமார் ஞானசேகரன் சங்கர் வேல்முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு எதிரான சரத்துகளை நீக்க வேண்டும் ஈபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தில் இருந்து ரூபாய் 7500 ஆக உயர்த்தி அகவிலைப்படி உடன் வழங்கிட வேண்டும்

ஓய்வூதியதாரர்களை ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் இணைப்பிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஒப்பந்த தொழிலாளர் முன்னிட்டு அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *