தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத சங்கத்தைச் சேர்ந்த சுமார் 20 நபர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக தையல் மிஷின் உள்ளிட்ட உபகரணங்கள் மேலும் அரிசி பருப்பு போன்ற நலத்திட்ட உதவிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் அபுதாஹீர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் நலத் திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட சங்க நிர்வாகிகள் கூறும் போது கம்பம் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி தையல் பயிற்சி மேற்கொண்டு தொழில் தொடங்க உள்ளதாக கூறினார்கள் எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவிய கம்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்