சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவிலான உள் விளையாட்டு போட்டிகள் – சதுரங்கம், கேரம், மேஜை பந்து, இறகு பந்து நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சார்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டன ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்கப் பிரிவில் ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் முதலிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில் கேரம் மேஜை பந்து பிரிவில் சங்கர் பாலிடெக்னிக் முதலிடமும், இறகு பந்து போட்டியில் நாகர்கோயில் அரசு தொழில் நுட்ப கல்லூரி, அணியினர் முதலிடமும், பெண்கள் பிரிவில் கேரம் போட்டியில் ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடமும் மேஜை பந்து பிரிவில் மெரிட் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை ஸ்காட் நிறுவனர் டாக்டர் கிளீட்டஸ் பாபு, அமலி கினிட்டஸ் பாபு, வாழ்த்தினர்.
சிறப்பு விருந்தினராக உதவி காவல் ஆய்வாளர் அந்தோணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். ஸ்காட் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் டாக்டர் ஜான் கென்னடி, டாக்டர்.சாதிக், மற்றும் ஸ்காட் சர்வதேச பள்ளி முதல்வர் கல்பனா வாழ்த்துரை வழங்கினர். பாலிடெக்னிக் முதல்வர் மணிமாறன், நிர்வாக அலுவலர்.சித்திரை சங்கர், உடற்கல்வி இயக்குநர்கள் அன்வர் ராஜா, வண்டிமலையான் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்..