அச்சிறுப்பாக்கம், ஆக. 22: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தின் விஜய வீர சாம்பவி சுவாமிகள் இன்று (ஆக. 22) காலை சித்தி அடைந்தார்.

அவரது மறைவையடுத்து, அவரது கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பக்தர்கள் மற்றும் நிர்வாகத்தினர் முன்வந்தனர். இதன்படி, அவரது கண்கள் மற்றும் உடல் உறுப்புகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

விஜய வீர சாம்பவி சுவாமிகளின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருப்பது, அவரது ஆன்மிகப் பணிகளுக்கு இணையாக மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உடல் உறுப்புகள் தானம் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றிய சுவாமிகளின் சேவை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *