தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர் மாநகர தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறப்பு பேரவை மாவட்டத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் தலைமையில் சரோஜ் நினைவகத்தில் நடைபெற்றது.
இந்த பேரவைக்கு மாவட்டச் செயலாளர் என்.குருசாமி முன்னிலை வகித்துப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் பி.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இப்பேரவையில் தஞ்சாவூர் மாநகருக்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்
கௌரவத் தலைவராக பா.இரவிச்சந்திரன், தலைவராக எம்.அப்பாஸ் மந்திரி, செயலாளராக வி.கே.மோகன், பொருளாளராக ஏ.ஜெயராஜ், துணைத் தலைவர்களாக பாஸ்டர் ஜஸ்டின், ஷபீக் பாபு, சம்சுதீன் அப்துல் ரசாக், நசீரா பானு, துணைச் செயலாளர்களாக என்.ரமேஷ், வி.ஜே.கிருஷ்ணமூர்த்தி, இ.வசந்தி, எம்.வடிவேலன்
உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பேரவையில், சிறுபான்மை மக்களின் மத உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகள் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடுவது, சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தியல் பிரச்சாரங்களை முறியடிக்க அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது, அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவை தஞ்சாவூர் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள், உறுப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.