மதுரை காக்கா தோப்பு தெருவில் அமைந்துள்ள மூட்டா அரங்கில் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் ஆணையாளர் களாக நாகராஜ், மணி ஆகியோர் செயல்பட்டனர். மாவட்டத் தேர்தலில் தலைவராக சாலமோன், செயலாளராக ராமசாமி, பொருளாளராக வெங்கிடசாமி ஆகியோரும், துணைத்தலைவர்களாக அழகிரி சாமி, பெனட் ரெஜினால்ட், நாகமலை, செல்லப்பாண்டி ஆகியோரும், இணைச் செயலாளராக பாக்கியராஜ், தேவராஜ் இஸ்ரேல், சுப்பிரமணியன், காந்திமதி ஆகியோரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக முருகேசன், தமிழரசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.