தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் முல்லையாற்றில் இருந்து வரும் குடிநீர் குழாய் மூன்று இடங்களில் உடைப்பு . தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் முல்லையாற்றில் இருந்து குடிநீர் குழாய் மூலம் பொது மக்களின் வீடுகளுக்கு பேரூராட்சி குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது
இந்த நிலையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து குடிநீர் குழாய்களில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ் அய்யனார் முருகன் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் ஆகியோர் பேரூராட்சி பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று பேரூராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மண் அள்ளும் ஜேசிபி இயந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வரும் பராமரிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
மேலும் இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ் அய்யனார் முருகன் கூறும் போது பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடி நீர் குழாய்களில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனை உடனடியாக சரி செய்து பேரூராட்சி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்