மதுரை திருப்பரங்குன்றம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முருகன், அழகர்சாமி, அந்தோணி ஜஸ்டின் திரவியம் ஆகியோர் கூட்டு தலைமை ஏற்றனர். இராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். ரமேஷ் பாபு, பிரேம்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினர். தோழமைச் சங்க நிர்வாகி சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்
செயலாளர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். போஸ் ராஜா நன்றி கூறினார். வட்டாரம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.