கம்பம் அருகே சுருளிப்பட்டி ஊராட்சியில் எம்பி நிதியில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சூழல் நுழைவு வாயில் நிழற் குடையை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் இருபால் ஆசிரியர்கள் தேனி எம்பி தங்க தமிழ் செல்வன் எம்பி அவர்களை நேரில் சந்தித்து எங்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் பள்ளி நுழைவுவாயில் சிதலமடைந்து உள்ளது
இதனை புதியதாக கட்டித் தர வேண்டும் மேலும் பள்ளி அருகே மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற் குடை அமைத்து தர கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கோரிக்கை உணவை உடனுக்குடன் பரிசீலித்த தேனி எம்பி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் சுற்றுச்சுவர் பள்ளி நுழைவு வாயில் பயணியர் நிழற்குடை கட்ட நிதி ஒதுக்கி பணி விறு விறுப்பாக நடைபெற்று கட்டி முடிக்கப்பட்டது புதிதாக கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் பள்ளி நுழைவுவாயிலை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்
தங்க தமிழ்செல்வன் எம்பி ரிப்பன் வெட்டி பள்ளி மாணவ மாணவிகளின் இருபால் ஆசிரியர்களுக்கும் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி அருகே பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற் குடையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ரிப்பன் வெட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் எம் வேல்பாண்டியன் தேனி மாவட்டத்தின் சிறந்த பொறியாளர் தொழில் அதிபர் ஜெ.எஸ்.டி. அன்பழகன் உள்ளிட்ட ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்