கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் பல்வேறு விண்வெளித் திட்டங்கள் மற்றும் ராக்கெட் ஏவுதல்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன முன்னதாக கண்காட்சி துவக்க விழா பள்ளியின் ஹெரால்டு ஷாம் தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளியின் தலைவர் செல்வி.கே.சுகுணா,செயலாளர் கிஃபோர்டு ஹெரால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார் விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி ரோஷன் ஷர்மா கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்..

நிகழ்ச்சியில் துடியலூர் காவல் நிலைய காவலர்கள் ஆசைத்தம்பி,விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கண்காட்சியில் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள், சந்திரயான் உள்ளிட்ட விண்வெளித் திட்டங்களின் மாதிரிகள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தன விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன கண்காட்சியின் முக்கிய அம்சமாக தத்ரூபமாக ராக்கெட் ஏவப்பட்ட காட்சி மாணவர்களை வெகுவாக கவர்ந்தது விண்வெளி ஆராய்ச்சிகள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் என எதிர்காலத்தில் விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த கண்காட்சியை நடத்தியதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

விண்வெளி அறிவியலை பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் கண்காட்சி, பள்ளி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *