அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்: அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு, கற்றல் மற்றும் ஞாபகத்திறனை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆயுஷ் நலவாழ்வு மையத்தின் சித்த மருத்துவர் புனிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகள் அறிவுத்திறன் மற்றும் படிப்பில் முழு கவனம் செலுத்துவதன் அவசியம், ஞாபகத்திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் 12ஆம் வகுப்பு மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் உமா, உதவி ஆசிரியர் கௌரி மற்றும் ஆசிரியர்கள் ஹேமலதா, துர்பா, ஜான்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *