துறையூர் ஆக-23
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 23-08-2026 அன்று மாலை 6 மணியளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இணைச்செயலாளர் மதன், துறையூர் நகர செயலாளர்கள் வினோத்குமார்(தெ), சூர்யா(வ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் ரவிசங்கர் பேசிய போது, நமது தளபதி எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியல் கட்சியை ஆரம்பித்து,முதல் தேர்தலிலேயே 108 இடங்கள் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்காக மட்டுமே மக்கள் விசில் சின்னத்தில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.ஆனால் திமுகவுக்கு இன்னுமும் தாங்களே ஆட்சியில் உள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. ஆகவே வைத்தியம் தான் செய்ய வேண்டும்.
“இனி வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சி அமைக்கவே முடியாது. அப்படி திமுக மீண்டும் ஆட்சி அமைத்துவிட்டால், நான் பொது வாழ்க்கையை விட்டு விலகிச் செல்கிறேன்” என சவால் விடுக்கும் வகையில் பேசினார்.தொடர்ந்து திமுக ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விமர்சனம் செய்த அவர், “ஊழல் என்று சொன்னாலே திமுகவினர் உடனடியாக எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.நாங்கள் ஊழல் என்று தானே சொன்னோம்,நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்,இது எங்கப்பன் குதுருகுள்ள இல்லை என்று சொல்வது போல் உள்ளது என விமர்சித்தார்.
அது மட்டுமல்ல,2026ல் விஜய் ஆட்சி அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்று ஆட்சி அமைத்து சட்டமன்றம் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறதே இதுதான் மாற்றம்.ஐபிஎல் ஓடினாலும் சட்டசபை நிகழ்வுகளை தான் மக்கள் டிவியில் பார்த்து வருகின்றனர்.அதனால் சேனல்களுக்கு டிஆர்பி ரேட் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மற்ற கட்சியைப் போல காசு கொடுத்து ஓட்டு வாங்கவில்லை, ஒற்றைத் தலைவன் தளபதிகாக மக்கள் விசில் சின்னத்தில் வாக்களித்தார்கள்.அதனால் தான் வாக்களிப்பின் போது சுமார் 300 இயந்திரங்கள் பழுதாகி விட்டதாக கூறப்பட்டது.
தேர்தலுக்கு முன்னர் இவர் என்ன எம்ஜிஆரா,என்டிஆரா, கேப்டனா,இல்லை தளபதி. இப்படி தளபதியை குள்ளநரி கூட்டத்தினர் எவ்வளவோ மோசமாக விமர்சித்தார்கள். தளபதி பார்ட்டி பண்ட் என்று ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். நீ என் ஏரியாவுக்கு வாடா, மாரியம்மன்கோவில் கிட்ட வாடா,பஸ்ஸ்டாண்ட்க்கு வாடா,என் வீட்டுக்கு வாடா என்று வடிவேலுவின் காமெடி போல் உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.
அதையும் தாண்டி தளபதி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். துறையூர் தொகுதியில் என்னை அறிவித்தவுடன் நான் பார்த்துக்கொள்கிறேன் நீ நில் என்று தளபதி கூறினார். நின்றேன் வென்றேன் தளபதியாள்.இனி தளபதி ஆட்சி தான்.சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் நானும் துறையூர் தொகுதியில் தான் குடியிருப்பேன் உங்கள் குறைகளை கண்டிப்பாக நிவர்த்தி செய்வேன் என்று பேசினார்.இக்கூட்டத்தில் துறையூர் ஒன்றிய செயலாளர்கள் தர்மா(கி), ரவிச்சந்திரன்(வ), சுதாகர்(தெ), சிவப்பிரகாசம்(மே), உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன்(வ), சண்முகம்(ம), உப்பிலியபுரம் பேரூர் கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக செயலாளர் கண்ணன் (எ) கிருஷ்ணமூர்த்தி, அரசு வழக்கறிஞர் செல்லதுரை, வழக்கறிஞர் அணி நிர்மல் குமார்,சிறப்பு பேச்சாளர்கள் பார்த்திபன்,நிலோஃபர்,பொது குழு உறுப்பினர்கள்,தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்