தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு பகுதிகளுக்கான குறைதீர் செயலி அறிமுகம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்.ஜோசப் விஜய் நல்லாசியுடனும், பொதுச் செயலாளர்என். ஆனந்த் வழிகாட்டுதல் படியும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எல்.தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் முகில் வீரப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழக வெற்றிக் கழக ஆட்சி சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தமிழக அரசின் 100 நாட்கள் சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து 500 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட தொண்டர் அணி சார்பில் மாவட்டச் செயலாளர் எல்.தர்மராஜ் அவர்களுக்கு வீரவாள் வழங்கப்பட்டது.கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு பகுதிகளுக்கான குறைதீர் செயலி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை நிர்வாகிகள் பாரத், சதீஸ்குமார், பாதவிநாயகர், சங்கர், ஹரிஹரன், விஜய், காளிதாஸ், ரம்ஜான், வெங்கடேஷ், பாண்டியன், கிளமெண்ட், கார்த்திகேயன், மனோஜ், ஜெகன், முருகானந்தம், கார்த்திக், லட்சுமிகாந்த், மாரீஸ்ராஜ், மனோகர், ரஞ்சித், கணவாபீர், காதர், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக 17வது வார்டு மாமன்ற உறுப்பினர் கேகேஆர்.வெங்கடேஷ், கணேஷ்பிரபு, சிவக்குமார், செந்தில், பவுன்ராஜ், வீரமலை, சிவப்பிரகாஷ், ஈஸ்வரமூர்த்தி, இராஜேந்திரன் உட்பட 16-வது வார்டு குமரன் திருநகர் பகுதி தமிழக வெற்றிக் கழகத்தினர் தொழிலதிபர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் மற்றும் மகேந்திரன், கணேசன், குமரவேல் பாண்டியன், சதீஷ், சிவகுமார், விக்கி, விக்னேஷ், ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கழக தோழர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.