தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் முன்னிலையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவின் தொடக்கமாக கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியை ஆர் சாந்தி பிரபா அனைவரையும் வரவேற்று பேசினார். ஓணம் பண்டிகை பற்றிய கருத்துக்களை இறுதியில் துறை பேராசிரியை செல்வி சிந்துஜா விரிவாக விளக்கி பேசினார்

ஓணம் பண்டிகையின் ஒரு அங்கமாக மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன இந்த விழாவில் கல்லூரி அனைத்துத் துறை பேராசிரியைகள் மாணவிகள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கல்லூரி பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் கல்லூரியின் முதலாம் ஆண்டு உயிர்த் தொழில்நுட்பவியல் துறை மாணவி கே. ஹனியா நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *