அரியலூரில் திராவிடர் கழக இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு நீட் தேர்வையும் உயர் ஜாதியினருக்கு EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் இருசக்கர பரப்புரை பயணம் விழுப்புரத்தில் துவங்கி முக்கிய நகரங்கள் வழியாக அரியலூர் வந்தது வாகன பரப்புரை பயணமும் வரவேற்பு பரப்புரை கூட்டமும் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது
திராவிடர் கழக அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலைநீலமேகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார் தலைமைக் கழக பேச்சாளர் மணியம்மை தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனைச்செல்வன் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்கசிவமூர்த்தி பேராசிரியர் வளனறிவு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன் மாணவர் கழகம் அறிவுச்சுடர் சங்கர் மணிவண்ணன் திலீபன் ரத்தின ராமச்சந்திரன் சிற்றரசு அரியலூர் நகரச் செயலாளர் ஆட்டோ தர்மா ஆண்டிமடம் தியாக முருகன் கீழப்பழுவூர் கே எம் அன்பரசன் உட்பட ஏராளமானோர் விளக்க உரையாற்றினார்கள் மாவட்ட மாணவர் அணி தமிழறிவாளன் அனைவருக்கும் நன்றி கூறினார் பின்பு பாண்டிச்சேரி சென்று புதன் கிழமை இந்த பிரச்சார பயணம் நிறைவடைகிறது