ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

இரயில்வே செய்தி அறிக்கை No.197 / 2026-27

எண்.197 / 2026-27 24.08.2026

ரயில் சேவைகளில் மாற்றம்

சேலம் – ஜோலார்பேட்டை ரயில் பிரிவில், சாமல்பட்டி – திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள காக்கங்கரை ரயில் யார்டில், குறைந்த உயர சுரங்கப்பாதை (Limited Use Subway) அமைக்கும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் காரணமாக, 25.08.2026 அன்று ஒரு ஜோடி ரயில் சேவைகளில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • வண்டி எண்.56108 ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில், ஈரோடு சந்திப்பில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 25.08.2026 அன்று மொரப்பூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் (Short Terminated). இந்த ரயில் ஈரோடு சந்திப்பில் இருந்து மொரப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அன்றைய தினம் மொரப்பூர் முதல் ஜோலார்பேட்டை சந்திப்பு வரை இயக்கப்படாது.
  • வண்டி எண்.56107 ஜோலார்பேட்டை – ஈரோடு பயணிகள் ரயில், ஜோலார்பேட்டை சந்திப்பில் இருந்து மதியம் 14.45 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 25.08.2026 அன்று அதற்கு பதிலாக மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 15.47 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஜோலார்பேட்டை சந்திப்பில் இருந்து மொரப்பூர் வரை இயக்கப்படாது; மொரப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு சந்திப்பு வரை இயக்கப்படும்.என

G. மரியா மைக்கேல்,
மக்கள் தொடர்பு அதிகாரி,
சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே.அவர்கள் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *