செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் நல்லாசியுடனும், செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் அனகை முருகேசன் அவர்களின் ஆலோசனைப்படியும், சித்தாமூர் பேருந்து நிலையத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சித்தாமூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர். சந்திரகாந்த் தலைமையில், அவைத்தலைவர் வி. நடராஜ் ஏற்பாட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சித்தாமூர் பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் சக்திவேல், மணிதர்மா, சந்தோஷ்குமார், அசோக்குமார், துளசிதாஸ், விஸ்வா, நாகராஜ், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலரும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *