சென்னை, சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  கேரள பாரம்பரிய ஓணவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை, கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் தேவராஜ், துணை நிறுவனர்  டெல்பின் தேவரஜ், செயலர் முனைவர் தே. தேவ் ஆனந்த், இணைச்செயலர் ஸ்ரீதேவி தேவ் ஆனந்த், முதல்வர் முனைவர் வே. ராதிகா ஆகியோர் உடனிருந்து துவக்கி வைத்தனர்.

ஓணவிழாவினை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு மலர்க்கோலப் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர், கேரளநாட்டின் மண்ணையும் மக்களையும் நேசித்த மஹாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக கல்லூரி மாணவர்களால் இடப்பட்ட பல்வகை மலர்களாலான அத்தப்பூ கோலமும், வழங்கப்பட்ட ஓணசத்திய விருந்தளிப்பும் கண்கவர் வகையில் அமைந்திருந்தன.

இந்நிகழ்வு கலாச்சார ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அமைந்திருந்தது. இதில் துணைமுதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்களான கல்லூரியின் கலைக்குழுவினர், டீன் குழு உறுப்பினர்கள், பல்வேறு துறைசார் துறைத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *