தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழா கல்லூரிச் செயலாளர் பாத்திமாராணி லூயிஸ் தலைமையில் முதல்வர் ரூபா மற்றும் துணை முதல்வர் மதுரவள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


அத்தப்பூ கோலம் பூக்களம் மாணவிகள் வண்ண மலர்களால் அழகிய பூக்கோலங்களை வடிவமைத்துப் பங்குபெற்றனர். கேரள பாரம்பரிய உணவான ஓண சத்யா முறையிலான பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு சுவைக்கப்பட்டன.

ஆடை அலங்கார அணிவகுப்பில் கேரள பாரம்பரிய உடைகளான கசவு சேலை மற்றும் வேட்டி அணிந்து மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து ஓணம் திருநாளை கொண்டாடினாா்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *