தாய்லாந்தின் சியாங் மாய் நகரில், UWSFF Powerlifting Association சார்பில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற உலக பவர்லிஃப்டிங் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து 50 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து எட்டு பெண்கள் உட்பட 19 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, அனைவரும் தங்களது பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

மேலும், இந்த போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு கிடைத்து உள்ளது ஆண்களும் பெண்களும் இணைந்து, தமிழ்நாட்டின் வலிமையை உலக அரங்கில் நிரூபித்த பெருமையான சேர்த்துள்ளனர்

தமிழகத்தில் இருந்து பங்கேற்ற அனைவரும் தங்கப்பதக்கம் வென்றிருந்த நிலையில் பேங்காக்கில் இருந்து விமான மூலம் பெங்களூரு வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் சென்னை விமான நிலையத்தில் வீரர் வீராங்கனைகளுக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்

44 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற பவர் லிப்டிங் போட்டியில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தங்கப்பதக்கம் வென்ற வி எஸ் யோகலட்சுமி அவர்களுக்கு அவரது குடும்பத்தினர் உற்சாகமாகவும் வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கப்பதக்கம் என்ற வீராங்கனை யோகலட்சுமி கூறுகையில்

கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பத்தாம் வகுப்பில் இருந்து பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றும் கடந்த முறை செல்லும் பொழுது வெள்ளி பறக்கும் வென்றேன் என்றும் இந்த முறை சென்று தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறேன் என்றும் கூறினார் மேலும் எஸ் டி ஏ டி இல் இந்த பவர் லிப்டிங் போட்டியை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் மேலும் மற்ற போட்டிகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை போல எங்களுக்கும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் மேலும் முக்கியத்துவம் கிடைத்தால் எங்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்

தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றும் பவர் லிப்டிங் போட்டியை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *