காரைக்காலை அடுத்துள்ள நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலய ஆண்டு திருவிழா வரும் 29.08.2026 (சனிக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் மாலை 5.45 மணியளவில் திருக்கொடி பவனி புறப்பட்டு முக்கிய வீதி கள் வழியாக வலம் வந்து பேராலயத்தை வந்தடைந்ததும் தஞ்சை ஆயர் டி.சகாயராஜ் அடிகளாரால் புனிதம் செய்து திருக்கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து திருத்தல கலைய ரங்கில் திருப்பலி நடைபெறுகிறது.
விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேராலய நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறையும் சிறப்பான முறையில் செய்து வருகின்றன.
விழாவையொட்டி தமிழகம் மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன
S. செய்யது தாஜுல் உசேன்
காரைக்கால் மாவட்ட செய்தியாளர்
9385856800