திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் பெயர்பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன், தேசிய பொது செயலாளர் நந்தகுமார் அவர்கள் இருவரும் இணைந்து பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
தேசிய கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் வரதராஜ் , திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சந்தனக் குமார் அவர்கள் தலைமையில் மற்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக சமபந்தி போஜனம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, ஏராளமானோர் கலந்து கொண்டு உணவருந்தினர். 500 பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்களும்,1000 நபருக்கு சமபந்தி போஜனமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் தேசிய, மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவரும் சிறப்பு பூஜையில் பங்கேற்று ஐயப்பன் அருளைப் பெற்றனர்.
பக்தி, சேவை மற்றும் சமுதாய நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சின்னாளபட்டி பகுதியில் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.
பணிகள் பல இருப்பினும் – திருப்பணி செய்வோம் என்ற உயரிய நோக்கத்துடன் அறக்கட்டளையின் சேவைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்