வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் விமரிசையாகக் கொண்டாட்டம்

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் கடைவீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான பத்ம பூஷன் “கேப்டன்” விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா, வறுமை ஒழிப்பு தினமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு பேரூர் முன்னாள் செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பேரூர் நகர செயலாளர் ஜீ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் வீரமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கழகச் செயலாளர் நாகை பிரபாகரன், கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ. பிரபாகரன், ஜீ. பக்கிரிசாமி, நாகை நகர செயலாளர் செல்வகுமார், நாகை ஒன்றிய செயலாளர் ஜீ.எஸ். பாஸ்கரன், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர்கள் லத்தீப், பகதூர் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், தேமுதிக நிர்வாகிகள் விஜயகுமார், வினோத், தியாகராஜன், திவான், ஆனந்த், பிரதீப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுப்பதற்கான உறுதியும் தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *