நாகப்பட்டினம்,ஆக.26-
இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் மிலாடி நபி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் மஸ்ஜித் அல் ஹிதாயா பள்ளிவாசல் சார்பில் நிர்வாக சபை தலைவர் முகமது நாசர் தலைமையிலும், கௌரவ தலைவர் கே.எம். பகுருதீன், செயலாளர் அப்துல் ரசீது, பொருளாளர் முகமது அமானுல்லா ஆகியோர் முன்னிலையிலும் பிறந்தநாள் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் நிர்வாக சபை நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். மஸ்ஜித் அல் ஹிதாயா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளிவாசலை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி, கட்டுமாவடி ஜமாத்தார்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஹிதாயா மதரசாவில் பயிலும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.