மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் குறுகிய இடத்தில் நெருக்கமான முறையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் மியாவாக்கி முறையில் 1008 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மாணவ மாணவியருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மேலும் சகோதரன் அமைப்பின் தலைவர் இயா.க. கோ. சுப்பிரமணியன், சிறு துளி அமைப்பின் நிர்வாக இயக்குனர் திருமதி. வனிதா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் திரு. கே.ராமசாமி வரவேற்று பேசினார். பள்ளிச் செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன் நன்றியுரை ஆற்றினார். பள்ளி முதல்வர் டாக்டர் இரா. உமா மகேஸ்வரி, துணை முதல்வர் முனைவர் சக்திவேல், கல்விப் புல முதன்மையர் ஷீலா கிரேஸ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *