காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் வாழ்வியல் குறித்த கருத்தரங்கம்
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும் என்னும் தலைப்பில் 28.08.2026 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் கவிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் செல்வகுமார் அவர்கள் இயற்கை மருத்துவத்தின் அவசியத்தையும் மரக்கன்று நடுதலின் பயன்களையும் கூறி தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நாகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கான அறிமுக உரையாற்றினார்.


சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பென்னாகரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவர், மரு. கோ. முனுசாமி அவர்கள் தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும் என்னும் தலைப்பில் நோய் பரவும் தன்மையை குறைக்கும் வழிமுறைகளைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்புமைப்படுத்தியதோடு கூறினார்.

மனிதனின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து இயற்கை முறையில் வாழும் தந்திரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.


இயற்கை முத்துக்குமார் அவர்கள் யோகாவின் நலன்களையும் மரம் வளர்க்கும் அவசியத்தையும் நெகிழிகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதால் மரங்கள் வளர ஏதுவான சூழலை ஏற்படுத்த முடியும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டினார். மேலும் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன்,துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச்செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்தனர். நிகழ்வின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிதா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *