காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி தென்கரை எம்.ஜி.ஆர். சாலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று அங்கன்வாடி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அங்கன்வாடி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கோட்டுச்சேரி V O C அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. மதுபாலா, கோட்டுச்சேரி அரசு மருத்துவமனையின் ஆஷா பணியாளர் திருமதி ரோஸ்மேரி சரண்யா, நுகர்வோர் சங்கங்கள் கூட்டமைப்பு – புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட மாநில செயலாளர் திரு. சிவக்குமார், பஞ்சாயத்து அளவில் பணிபுரியும் L.R.P. திருமதி அமுதா, திருமதி இந்திராணிGender crp ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், எம்.ஜி.ஆர். சாலை தென்கரை பகுதியைச் சேர்ந்த மகளிர் திருமதி வசுந்தரா தேவி மற்றும் திருமதி மனோன்மணி EC member ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி உதவியாளர் திருமதி சாந்தி அவர்கள் செய்திருந்தார்.