வேப்பூர் ஆக-28
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் பேருந்து நிறுத்தம் அருகே சேலம்– விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நடந்த சாலை விபத்தில் அரசு மநாகர பேருந்து நடத்துனர் பலியானார் உடன் சென்றவர்களில் 20 பேர் காயமடைந்தனர்
கடலூர் பூண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் மகன் மனோகரன் (வயது 55) இவர் சென்னை மாநகர பேருந்தில் தாம்பரம் டெப்போவில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு ஒரு பெண் பிள்ளையும் இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண், மற்றும் ஒரு பெண் பிள்ளை என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர்
இதில் இவரது முதல் மனைவியின் மகள் சைனி என்பவருக்கு நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் திருமணம் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 46 பேர் ஒரு தனியார் பேருந்தில் திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்
இவர்களது பேருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சேலம் சாலையில் வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது டயர் பஞ்சராகி சாலை ஓரம் நின்ற லாரியின் மீது திருமண கோஷ்டி சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது
இதில் அரசு பேருந்து நடத்துனர் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
பேருந்தில் பயணம் செய்த46 பேரில் 20 பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது மற்றவர்களுக்கு காயமில்லை
காயம்பட்டவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சை காக விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கபட்டனர்
விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் உதவியுடன் மீட்டு போக்குவரத்தை சரி செய்த வேப்பூர் போலிசார் மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.