​கோயம்புத்தூர், இந்தியாவின் முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான ‘ராயல்ஒக் ஃபர்னிச்சர்’ (RoyalOak Furniture), கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் (அமர் ஜோதி சரோஜ் நகர், துடியலூர், பழமுதிர் நிலையம் எதிரில், விஜி மருத்துவமனை அருகில்) தனது பிரம்மாண்ட புதிய பிளாக்ஷிப் ஸ்டோரைத் தொடங்கியுள்ளது. 16,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய ஸ்டோரை கே.ஜி. மருத்துவமனை மற்றும் கே.ஜி. குழும நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் UPSC முன்னாள் உறுப்பினரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் இ. பாலகுருசாமி, கங்கா மகளிர் மற்றும் குழந்தைகள் மையத்தின் ஆலோசகர் டாக்டர் எஸ். ஆனந்தி, M/s கார்னிஷ் இண்டீரியர்ஸ் நிறுவனத்தின் ஃபிரான்சைஸ் பார்ட்னர் திரு. பன்னீர்செல்வம், ராயல்ஒக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. மதன் சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

​இப்புதிய ஸ்டோரில் ராயல்ஒக்கின் சிறப்பு ‘கண்ட்ரி கலெக்ஷன்’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, வரவேற்பறை, படுக்கையறை, டைனிங் பகுதிகள், ஸ்டடி மற்றும் அலுவலகம், வெளிப்புற இடங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஃபர்னிச்சர்கள் ஒரே கூரையின் கீழ் மலிவு விலையில் கிடைக்கின்றன. விழா குறித்துப் பேசிய நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் சுப்பிரமணியம், “இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 250-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களைக் கொண்டுள்ள நாங்கள், கோவையில் இக்கிளையைத் திறப்பதில் பெருமிதம் கொள்கிறோம். சர்வதேச தரத்திலான ஃபர்னிச்சர்களை மலிவு விலையில் வழங்கும் எங்கள் சேவைக்கு கோவை மக்கள் பெரும் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த புதிய விரிவாக்கம் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் புதிய விற்பனையாளர்கள் மற்றும் ஃபிரான்ச்சைசிகளுடன் கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *