சர்வதேச கராத்தே செமினார் மற்றும் டேன் தேர்வில் கோவை பயிற்சியாளர்கள் சாதனை-ஜப்பானில் இருந்து கோவை திரும்பிய கராத்தே பயிற்சியாளர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஜப்பான் நாட்டின் தகாசாகி நகரில் ஜித்தோகாய் கராத்தே-டோ சர்வதேச செமினார், மற்றும் டேன் தேர்வு நடைபெற்றது சர்வதேச கராத்தே கருப்பு பட்டைய டேன் தேர்வாக நடைபெற்ற இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச ஜித்தோ காய் கராத்தே டோ அமைப்பின் நிறுவனர் மற்றும் கிராண்ட் மாஸ்டர் சென்செய் தொமோமி கிஷி கலந்து கொண்டார்.. இதில்,கோவையை சேர்ந்த முத்துராஜு, 8-வது டேன் தேர்விலும், கணேஷ்மூர்த்தி 6-வது டேன் தேர்விலும் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர்.

உலகத்தரம் வாய்ந்த கராத்தே டேன் ஆக தேர்வு செய்யப்பட்ட இருவரும் ஜப்பானில் இருந்து கோவை விமான நிலையம் வந்தனர் பயிற்சியாளர்கள் முத்துராஜு மற்றும் கணேஷ்மூர்த்திக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருவருக்கும் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.இதில் கராத்தே பயிற்சியாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலகத் தரம் வாய்ந்த கராத்தே பயிற்சி முறைகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் மற்றும் சர்வதேச விதிமுறைகளை இந்தியாவில் உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்ப்பதுடன், கராத்தே விளையாட்டில் ஒழுக்கம், தொழில்நுட்பம் மற்றும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் செயல்பட உள்ளதாக கோவை திரும்பிய பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஜித்தோ காய் கராத்தே டோ அமைப்பின் ஹெட்டாக சென்ஷாய் முத்துராஜ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *